அமெரிக்கா
அமெரிக்காவில் வேற்றுமை கண்டேன்
வேற்றுமையில் கலாச்சாரம் கண்டேன்
பல தேசத்து மக்கள் கண்டேன்
அனைவரும் ஒற்றுமையாக வாழக் கண்டேன்!
இங்கு செல்வ செழிப்பை கண்டேன்
இங்கு மனிதருள் வறுமையும் கண்டேன்
அதீத செழிப்பின் சேதம் கண்டேன்
அதை மக்கள் சிலரின் அறியாமையில் கண்டேன்!
பஞ்சமில்லா தேசம் கண்டேன்
அதை பறைசாற்றும் அதன் மக்களில் கண்டேன்
இங்கு தேவைக்கு அதிகமான உணவு கண்டேன்
சக நாடுகளுடன் பகிர்ந்து உண்ணா பழக்கமும் கண்டேன்!

0 Comments:
Post a Comment
<< Home